ஆஸ்திரேலிய அணி இந்த உலகக்கோப்பைத் தொடரில் மிக சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இன்னும் லீக் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியுடனானப் போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடிக்கும். அப்படி நீடிக்கும் பட்சத்தில் நான்காம் இடத்தில் நியுசிலாந்து அணியுடன் மோதும்.