மேலும் ஒரு சிறந்த கேப்டன் தன்னிடமுள்ள பந்துவீச்சாளர்களை எப்படி சிறப்பாக கையாள வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவேண்டும். உங்கள் பிரதான பந்துவீச்சாளரை கடைசி ஓவருக்கு வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் விருப்பமான ஒருவருக்கே நீங்கள் பந்தைக் கொடுக்க வேண்டி இருக்கும். ரிஷப் பந்த் நல்ல கேப்டனாக வேண்டுமெனில், சிறு சிறு விஷயங்களை அவர் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அவர் ஸ்மார்ட் கேப்டனாக முடியும் எனக் கூறியுள்ளார்.