பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக இசான் மணி செயல்பட்டு வருகிறார். நாளையோடு அவரின் பதவிக் காலம் முடிய உள்ள நிலையில் அவருக்கு பதில் யார் தலைவர் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இசான் மணியும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராசாவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இதனால் ரமீஸ் ராஜா அடுத்த தலைவராக சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.