இன்றுடன் நிறைவடைகிறது பாரிஸ் ஒலிம்பிக்ஸ்! நிறைவு விழாவில் இந்திய வீரர்கள்!

Prasanth Karthick

ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2024 (09:15 IST)

பிரான்ஸ் நாட்டில் கோலாகலமாக நடந்து வந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில் நிறைவு நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

 

 

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கி பரபரப்பாக நடந்து வந்தது. இந்த போட்டிகளில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளிலும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் போட்டிப் போட்டு பதக்கங்களை அள்ளி சென்றுள்ளன. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலரும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

 

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதி போட்டி வரை முன்னேறி திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்தியா தங்கம், வெள்ளி வெல்லும் வாய்ப்பை இழந்தது. நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளி வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். மேலும் மனு பாக்கர், இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கங்களை வென்றனர். ஆனால் இந்த ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்கு ஒரு தங்கம் கூட கிடைக்கவில்லை.

 

இன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் தடகளம், கூடைப்பந்து, வாலிபால், மல்யுத்தம் உள்ளிட்ட 9 போட்டிகள் நடபெற உள்ளது. அதன்பின்னர் ஒலிம்பிக்ஸ் நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த நிறைவு விழாவில் நடைபெறும் அணிவகுப்பில் மனுபாக்கர், ஸ்ரீஜேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி அளவில் இந்த நிறைவு விழா நடைபெற உள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்