புனேவில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் ஆடி 5 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் சேர்த்தது. அதனால் இந்தியா எளிதாக வெற்றி பெற்றுவிடும் என நினைத்தனர் ரசிகர்கள். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆடிய இங்கிலாந்து அணி 44 ஓவர்கள் முடிவில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பேர்ஸ்டோ 124 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 99 ரன்களும் அதிரடியாகக் குவித்தனர்.
இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் 20 சிக்ஸர்கள் விளாசினர். அதில் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் மட்டும் 8 சிக்ஸர்கள் பறந்தன. இதன் மூலம் அதிக சிக்ஸர்கள் விட்டுக்கொடுத்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனைக்கு அவர் ஆளாகியுள்ளார். இதற்கு முன்னர் வினய் குமார் 7 சிக்ஸர்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.