ரிடையர்ட்மெண்ட் குறித்து தற்போதே முடிவெடுத்த கோலி!!

சனி, 9 செப்டம்பர் 2017 (13:37 IST)
28 வயதாகும் இந்திய கேப்டன் கோலி, இந்திய சீனியர் கிரிக்கெட் அணியில் விளையாட வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. 


 

 
இதுவரை பங்கேற்ற 59 டெஸ்ட்களில், 4,616 ரன்கள் எடுத்துள்ளார். அதில், 17 சதம், 14 அரை சதங்கள் அடித்துள்ளார். 
 
194 ஒருநாள் போட்டிகளில், 8,587 ரன்கள் எடுத்துள்ளார். அதில், 30 சதம், 44 அரை சதங்கள் அடித்துள்ளார். குறுகிய காலத்தில் அதிக போட்டிகளில் விளையாடி, பல சாதனைகளை படைத்துள்ளார் கோலி.

இந்நிலையில், தனது ரிடையர்ட்மெண்ட் குறித்து பேசியுள்ளார் கோலி. இது குறித்து அவர் கூரியதாவது, எத்தனை காலம் என்னால் விளையாட முடியும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
 
பல நேரங்களில் 70 சதவீதம் வரைதான் நம்மால் முடிகிறது. நான் தற்போது கொடுத்து கொண்டிருக்கும் இதே முயற்சியை தொடர்ந்து கொடுத்தால், அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்