கோலியை அடிக்க விட்டு வேடிக்கை பார்த்த தோனி

திங்கள், 4 செப்டம்பர் 2017 (20:07 IST)
இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிக்கான ரன்னை கோலி அடிக்க வாய்ப்பு கொடுத்து தோனி வேடிக்கை பார்த்தார்.


 

 
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டி ஆகிய இரண்டு தொடர்களில் இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது. 
 
நேற்று நடைபெற்ற 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. கோலி சதம் விளாசினார். இறுதியாக இந்திய அணி வெற்றிப்பெற இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. தோனி பந்தை எதிர்கொள்கிறார், கோலி எதிர் முனையில் உள்ளார். தோனி ஆட்டத்தை சிறப்பாக முடிப்பதில் வல்லவர். வெற்றிக்கான ரன் அடிப்பத்தில் கில்லாடி. 
 
இந்நிலையில் பந்தை எதிர்க்கொண்ட தோனி 1 ரன் மட்டும் ஓடி கோலிக்கு வாய்ப்பு கொடுத்தார். வெற்றிக்கான ரன்னை கோலி அடிக்க வாய்ப்பு வழங்கி களத்தில் எதிர்முனையில் இருந்து ரசித்தார். அப்போது தோனியை பார்த்து சிரித்துக்கொண்டே வெற்றிக்கான ரன்னை அடித்தார்.
 
இதேபோன்று 2வது ஒருநாள் போட்டியில் புவனேஷ் குமாரை அடிக்கவிட்டு வேடிக்கை பார்த்தார். 4வது ஒருநாள் போட்டியில் தன்னால் அரைசதம் அடிக்க முடியும் என்ற நிலையிலும் எதிர்முனையில் 49 ரன்களுடன் நின்ற மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
 
தோனி தற்போதைய இந்திய அணியின் சீனியர் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வளரும் இளைய தலைமுறை வீரர்களுக்கு சீனியர் என்ற இடத்தில் இருந்து அருமையாக வாய்ப்பு வழங்கியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்