423 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து; கோஹ்லி, புஜாரா டக் அவுட்
திங்கள், 10 செப்டம்பர் 2018 (22:44 IST)
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இந்திய - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதைத்தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் தவான் 1 ரன்களில் வெளியேறினார்.
அதைத்தொடர்ந்து புஜாரா, கோஹ்லி டக் அவுட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இன்றைய நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் குவித்துள்ளது.
நாளை போட்டியின் கடைசி நாள் என்பதால் இந்திய அணி பெரும்பாலும் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்காமல் டிரா செய்யவே போராட வேண்டும்.