நாளைய டெஸ்ட் போட்டியில் இந்தியா ஜெயித்தால் உலக சாதனை

வெள்ளி, 1 டிசம்பர் 2017 (15:07 IST)
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
 
இந்த நிலையில் நாளை 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றால் உலக சாதனை ஒன்று சமன் செய்யப்படும்
 
அதாவது இந்திய அணி தற்போது தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இந்த தொடரையும் கைப்பற்றினால் தொடர்ச்சியாக 9 தொடர்களில் வெற்றி கிடைத்த அணியாக கருதப்படும். இதற்கு முன்னர் உலக சாதனையாக தொடர்ச்சியாக ஒன்பது தொடர்களில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்த வரிசையில் இந்தியாவும் இணைய ஒரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நாளை தொடங்கும் போட்டியை டிரா செய்தால் கூட இந்தியா தொடரை வென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இந்த சாதனையை சமன் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்