நேற்றைய போட்டியில், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 47 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜாஸ் பட்லர் 51 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய தரப்பில், ஜடேஜா மற்றும் ரானா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை அடுத்து, 249 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 15 ரன்களிலும் அவுட் ஆனாலும், சுப்மன் கில் அபாரமாக விளையாடி 87 ரன்கள் அடித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 59 ரன்களும், அக்சர் பட்டேல் 52 ரன்களும் எடுத்த நிலையில், இந்திய அணி 38 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில், சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக் மைதானத்தில் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.