எதிர்காலத் திட்டம் என்ன?... பத்திரிக்கையாளரின் கேள்வியால் கடுப்பான ரோஹித் ஷர்மா!

வியாழன், 6 பிப்ரவரி 2025 (11:16 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த டி 20 தொடரில் அபாரமாக விளையாடி இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து டெஸ்ட் தொடரில் தோல்விகளைப் பெற்று வந்த இந்திய அணிக்கு இது உத்வேகம் அளிக்கும் ஒன்றாக அமைந்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் மதியம் 1 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த மைதானத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. சரியான ஃபார்மில் இல்லாத இந்திய மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் மீண்டும் தங்கள் இயல்பான ஆட்டத்துக்குத் திரும்ப இந்த தொடர் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா பத்திரிக்கையளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் “சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பின் உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?” என்ற கேள்வியை எழுப்பினார்.

அதனால் கோபப்பட்ட ரோஹித் “என்ன கேள்வி இது? இப்போது அந்த கேள்வி எதற்காக?. நான் எதற்கு எனது எதிர்காலம் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசவேண்டும்? அதுவும் அடுத்தடுத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் வரவுள்ள நிலையில்” எனப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்