ஜெய்ஸ்வால் உள்ளே… கோலி வெளியே – இந்திய அணியில் நடந்த அதிரடி மாற்றம்!

vinoth

வியாழன், 6 பிப்ரவரி 2025 (14:00 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த டி 20 தொடரில் அபாரமாக விளையாடி இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து டெஸ்ட் தொடரில் தோல்விகளைப் பெற்று வந்த இந்திய அணிக்கு இது உத்வேகம் அளிக்கும் ஒன்றாக அமைந்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் மதியம் 1 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்து ஆடி வருகிறது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி விளையாடவில்லை. அதே போல ஜெய்ஸ்வால் அணிக்குள் வந்துள்ளதால் ஷுப்மன் கில் நான்காவது பேட்ஸ்மேனாக பின் தள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து
பென் டக்கெட், பிலிப் சால்ட் (கீப்பர்), ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தெல், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், சாகிப் மஹ்மூத்

இந்தியா
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ஷுப்மேன் கில், கே.எல்.ரஹுல் (டபிள்யூ), ஹார்டிக் பாண்ட்யா, ஆக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்