ஒலிம்பிக் நடக்குமா? நடக்காதா?... சொல்லுங்கப்பா எனக் கடுப்பான பெடரர்!

திங்கள், 17 மே 2021 (08:12 IST)
ஜப்பானில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்பது குறித்து போட்டி அமைப்பாளர்கள் தெளிவு படுத்த வேண்டும் என ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யவேண்டும் என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 3. 5 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஒலிம்பிக் நடக்க இருக்கும் ஜப்பானிலும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு எதிராகவே மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் போட்டி அமைப்பாளர்கள் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதுகுறித்து பேசியுள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ‘ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் தொடர் நடக்குமா நடக்காதா என்பதை தெளிவாக அறிவிக்கவேண்டும் ‘ எனக் கோரிக்கை வைத்துள்ளார். 39 வயதாகும் பெடரர் கலந்துகொள்ள இருக்கும் கடைசி ஒலிம்பிக்காக இது இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்