தோனி மகள் பாடிய மலையாள பாடல் - வைரல் வீடியோ

புதன், 25 அக்டோபர் 2017 (15:34 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஸிவா மலையாள சினிமா பாடல் ஒன்றை பாடும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் மகள் ஸிவா தனது மழலை மொழியில் மலையாள பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
முன்பு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தோனி மகளுடன் உரையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவும் வைரலாக பரவியது. தோனிக்கு இந்தியவை கடந்து பல நாடுகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 
 
கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னரும் தோனி தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார். கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் தோனிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தோனியின் மகளும் அதிக அளவிலான ரசிகர்களை பெற்றுள்ளார். 
 

நன்றி: Gup Chup Masti

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்