இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்லது. இதில் டெஸ்ட் தொடர் விளையாடி முடிக்கப்பட்டு இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் மற்றும் தவான் ஆகிய மூவரில் யார் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறக்கப்படுவார் என்ற கேள்விக்கு கோலி பதிலளித்துள்ளார். அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் ராகுல் களமிறக்கப்படுவார்கள். தவான் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார். இவர்கள் இருவருக்கும் காயம் அல்லது ஓய்வு அளிக்கப்படும்போது தவான் களமிறக்கப்படுவார் எனக் கூறியுள்ளார்.