உச்சகட்ட மோதல்: மலிங்காவின் மனைவியால் இலங்கை அணியில் விரிசல்?

வியாழன், 31 ஜனவரி 2019 (09:45 IST)
இலங்கை அணியின் ஒற்றுமை மலிங்காவின் மனைவியால் சீர்குலைய வாய்ப்பிருக்கிறது திசரா பெரரா கூறியுள்ளார்.
இலங்கை வீரர் லாஷித் மலிங்காவின் மனைவி தன்யா பெரரா, இலங்கை அணியின் வீரரான திசரா பெரரா இலங்கை அமைச்சரின் தயவால் தான் அணியில் நீடிக்கிறார் என்று சமூகவலைதளத்தில் சர்ச்சையான கருத்தை பதிவிட்டார். இதனால் கடுப்பான திசரா பெரரா தான் சிறப்பாக விளையாடியதால்  அணியில் நீடிக்கிறேன் என தெரிவித்தார்.
 
ஆனாலும் விடாத தன்யா பெரரா, மீண்டும் அதே போல் மறுபடியும் டுவீட் செய்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற திசரா பெரரா, தன்யா பெரராவின் செயலானது அணியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக உள்ளது எனவும் இதனை தடுக்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்