நடந்து முடிந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் இறுதி போட்டி வரை சென்று 100 கிராம் எடை கூடியதால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.பதக்கத்தை இழந்தாலும், இந்தியா முழுவதும் அவருக்கு ஆதரவு கரம் நீட்டப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியின் போது நீர்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான பி.டி.உஷா, வினேஷ் போகத்தை மருத்துவமனையில் சந்தித்த புகைப்படம் வெளியானது.
இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள வினேஷ் போகத், பி.டி.உஷா என் அனுமதியின்றி என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, அந்தப் புகைப்படத்தை என்னிடம் சொல்லாமல் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.