துபாயில் நடைபெற்ற ஐசிசி கவுன்சில் கூட்டத்தில் 2023 உலக கோப்பைக்கு பிறகு அடுத்த 8 ஆண்டுகளுக்கு நடத்தபோகும் தொடர்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வழக்கம் போல நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவர் உலக கோப்பை இரண்டு, 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நான்கு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. இவை அல்லாமல் புதியதாக இரண்டு தொடர்களை உருவாக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தது ஐசிசி.
தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் அணிகளுக்கிடையேயான போட்டியாக அது இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் ஐசிசி நடத்தும் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமைகளுக்கான டெண்டர்களை ஐசிசியே மேற்கொள்ளும். அதனால் கிடைக்கும் வருவாயில் சில விகிதம் மட்டுமே பிசிசிஐக்கு வந்து சேரும்.