119 வருட சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

வெள்ளி, 17 மார்ச் 2017 (06:50 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நேற்று தொடங்கிய 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ரென்ஷா 119 வருட கிரிக்கெட் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.


 


ஏற்கனவே புனே, பெங்களூரு ஆகிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த ரென்ஷா, 20 வயதே ஆனவர். இவர் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் எடுத்தபோது 500 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.

மேலும் 20 வயதில் 500 ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை பெற்றார். இதற்கு முன்னர் கிளெம் ஹில் 21 வயதிற்குள் 482 ரன்கள் குவித்திருந்தார். இதுதான் 20 வயதுக்குள் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்த நிலையில் இந்த சாதனையை நேற்று ரென்ஷா முறியடித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்