இதையடுத்து அஸ்வின் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக அஸ்வின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தான் செய்தது நியாயமே எனப் பதிலளித்து வருகிறார். இந்நிலையில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு இப்போது ஒரு ரசிகர் இதுபற்றிஅஸ்வினிடம் கேள்வி எழுப்ப பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியேறினால் இதை நான் மீண்டும் செய்வேன். நான் வேண்டுமானால் உங்களிடம் அனுமதிக் கோரிக் கொள்கிறேன். நீங்கள் இதுகுறித்து என் பெற்றோரிடம் சொல்லாமல் எனக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன் எனக் கூறி கேலி செய்துள்ளார்.