அஸ்வினுக்கு பதிலாக சாஹல் மற்றும் குல்தீப் என இரு புதிய சுழற்பந்து வீச்சாளர்களை களம் இறக்கியுள்ளனர். மேலும், 2019 உலக கோப்பை கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் களம் இறக்கப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து குல்தீப் யாதவ் பின்வருமாறு பேசினார், அஸ்வின் என்னை விட மிகவும் திறமைசாலி, அதே போல அதிக அனுபவம் கொண்டவர். அவருக்கு மாற்றாக என்னை நினைத்து கூட பார்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.