இதையடுத்து நான்காம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் லாரன்ஸை அஸ்வின் அவுட் ஆக்கினார். இது அஸ்வினின் இரண்டாவது விக்கெட் ஆகும். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களும், பேட்டிங்கில் ஒரு சதமும் அடித்த அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இங்கிலாந்து அணி இன்னும் 394 ரன்கள் சேர்க்க வேண்டியுள்ளது.