வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் ஓய்வு குறித்து முடிவு செய்யவுள்ளதாக வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். தற்போது தனது கவனம் முழுவதும் பஞ்சாப் அணியை இறுதி போட்டிக்கு கொண்டு செல்வதில்தான் உள்ளதாகவும், இந்த போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.