இங்கிலாந்து அணிக்கு 190 இலக்கு கொடுத்த தென்னாப்பிரிக்கா
சனி, 6 நவம்பர் 2021 (21:30 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தொடரின் முப்பத்தி ஒன்பதாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியின் இன்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியது அடுத்து 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து இங்கிலாந்து அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் 190 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது. இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றால் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது