இங்கிலாந்து அணிக்கு எளிய இலக்கை நிர்ணயம் செய்த வங்கதேசம்!
புதன், 27 அக்டோபர் 2021 (17:23 IST)
இங்கிலாந்து அணிக்கு எளிய இலக்கை நிர்ணயம் செய்த வங்கதேசம்!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களத்தில் இறங்கியது
ஆனால் அந்த அணி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் ஆவேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக முசாபிர் ரஹிம் 29 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பந்துவீச்சை பொறுத்தவரை இங்கிலாந்து அணியின் மில்ஸ் 3 விக்கெட்டுகளையும் மொயீன் அலி மற்றும் லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் 125 என்ற எளிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாட உள்ள நிலையில் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் மிக எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.