செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும், எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.
வெண்கடுகு, மருதாணி விதை, சாம்பிராணி, வில்வ இலை பொடி, வேப்ப இலை பொடி, அருகம்புல் பொடி, குங்கிலியம்பொருட்களை தயார் செய்து கொள்ளவும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை.
குங்கிலியம், சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள பொருட்களுடன் சேர்த்து கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும்.
ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும். வில்வம் சிவனுக்கும் வேம்பு அம்மனின் சக்தி இவர்களுக்குரியது. மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்.