புதியதாக வீடு கட்டும்போது ஏதாவது சில காரணங்களால் சிலருக்கு தடைபட்டு நிற்கும். வீடு கட்ட இருக்கும் இடம் முன்பு ஒரு வேலை இடுகாடாகவோ, நரபலி கொடுத்த இடமாகவோ, புற்றுகள் இருந்து அகற்றப்பட்டோ அல்லது பில்லி, சூனியம், பேய் பிசாசுகள் கண் திருஷ்டிகளினால் தடை ஏற்படலாம்.
புதிதாக வீடு கட்டுபவர்கள் அனைவரும் வாஸ்து நாளில் பூமி பூஜை போட்டு வீடு கட்டத் தொடங்கினால், வேலைகள் வெகு சீக்கிரம் முடியும். மிகச்சரியான வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது. நிம்மதி மகிழ்ச்சி பெருகும்.