ஈசான திக்கில், ஈசன் ஆலகால விஷமருந்தி பின் எழுந்து ஆனந்த தாண்டவம் ஆடியபோது கூடவே பூதகணங்களும் பூதநிருத்தம் ஆடின. இதற்கென பிரத்யேகமாக ராகம், தாளம், வாத்தியம் உண்டு.
பிரதோஷ நேரத்தில் ஈசனுக்கு வில்வ தளங்க ளால் மாலை தொடுத்து அணிவிப்பது பெரும் பாக்கியம் தரும். பிரதோஷ வேளை, ரஜ்னிமுக வேளை என்றும் அழைக்கப்படுகிறது. அதற்கு இரவின் முகம் என்பது பொருள். தோஷம் என்றால், குற்றமுள்ள என்று பொருள். பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது. குற்றமற்ற அந்த வேளையில் ஈசனைத் தொழ, நம் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
ஈசன் விஷத்தையுண்டு, சயனித்து, பிறகு எழு. ந்து முதன்முதலாக சந்தியா தாண்ட வத்தை ஆடியது ஒரு சனிக்கிழமை மாலையில்தான் என்பதால் சனிப்பிரதோஷம் சிறப்பானது. தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் பிரதோஷ தரிசனம் செய்பவர்களுக்கு சிவலோக பதவி கிட்டும்.
பிரதோஷ வேளையில் ஈசன் ஆடும் தாண்டவத்திற்கு அம்பிகை பாட, நான்முகன் தாளம் போட, சரஸ்வதி வீணைமீட்ட, நரநாரா யணர்கள் மத்தளம் இசைக்க, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, லட்சுமி கஞ்சிரா இசைக்க, ஏழுகோடி இசைக்கருவிகளை கந்தர்வர்கள் மீட்டுவதாக ஐதீகம்.