வெற்றிலையில் மூன்று வகைகள் உள்ளன. ஒன்று ஆண் வெற்றிலை. ஆண் வெற்றிலை என்பது வெற்றிலையின் வலது புறம் அதிக இலை தன்மையுடன் இருக்கும். பெண் வெற்றிலை என்பது வெற்றிலையின் இடது புறம் அதிக இலை தன்மையுடன் இருக்கும். மேலும் வெற்றிலையில் நடுக்காம்பிலிருந்து ஒரு புள்ளியில் இருந்து நரம்புகள் பிரிந்து இருந்தால் ஆண் என்றும். பல புள்ளிகளில் இருந்து பிரிந்து வந்தால் பெண் என்றும் கூறப்படுகிறது. இவை இரண்டும் இந்த பரிகாரத்திற்கு உகந்தது அல்ல. இருபுறமும் சமமாக இருக்கும் நல்ல தெய்வ வெற்றிலையை 5 என்ற எண்ணிக்கையில் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
மஞ்சளில் நனைத்த காட்டன் துணி சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த 5 வெற்றிலைகளை விரித்து அதில் 11 ஏலக்காய், 11 கொட்டைபாக்கு, அட்சதை எனப்படும் மஞ்சளில் நனைத்த அரிசி சிறிது வைத்து மொத்தமாக முடிந்து மஞ்சள் நூலில் மூன்று முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். மூன்று முடிச்சு போடும் போது இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். இது மஹாலக்ஷ்மி தேவிக்கு சமர்ப்பணம் என்ற பொருள் கொண்டது.