நெய்-நாதம், திரி-பிந்து, சுடர்-திருமகள், தீப்பிழம்பு-கலைமகள், தீ-சக்தி. குத்துவிளக்கு நம் உடலிலும் இருக்கிறது. அடிப்பாகம் நாபிக்குக் கீழ் உள்ள மூலாதாரம். மேல்நோக்கி ஓடும் சுசூம்னா நாடியே விளக்கின் தண்டு. கழுத்துக்கு மேற்பட்ட பகுதியே குத்துவிளக்கின் தலைப்பாகம். புருவ மத்தியில் ஜோதி ஜோலிப்பதே குத்துவிளக்கின் சுவாலை. ஆத்ம ஜோதியை வணங்குவதே தீப பூஜையின் தத்துவம்.