நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை பொடிகளும் அதன் பயன்களும்...!!
அருகம்புல் பொடி: அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. நெல்லிக்காய் பொடி: பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது.
* கடுக்காய் பொடி: குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
* வில்வம் பொடி: அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.
* அமுக்கலா பொடி: தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
* சிறுகுறிஞான் பொடி: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
* நவால் பொடி: சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
* வல்லாரை பொடி: நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
* தூதுவளை பொடி: நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
* துளசி பொடி: மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
* ஆவரம்பூ பொடி: இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
* கண்டங்கத்திரி பொடி: மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.