நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் கொண்டைக்கடலையின் பயன்கள்...!!

கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள்,  அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி செய்கிறது.
 
கொண்டக்கடலை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். மேலும், எடையைக் குறைக்கவும், இதய நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.
 
ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவி புரியும். அதிலும் இதனை தினமும் அரை கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல், அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன்  இருக்கலாம்.
 
இரத்த சோகை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள்  கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம்.
 
கொண்டைக்கடலையை அவித்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு உறுதியை கொடுக்கும். கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும்  ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
 
வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக்கடலையை தவிர்ப்பது நல்லது. இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது.
 
தினமும் இரவில் படுக்கும் போது ப்ரௌன் நிற கொண்டக்கடலையை ஊறவைத்து, மறுநாள் காலையில் அதனை சாப்பிட்டு வந்தால், அதனால் செரிமான  பிரச்சனைகள் நீங்கிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்