தேய்பிறை சப்தமி திதி வழிபாட்டு பலன்கள் !!

வியாழன், 24 மார்ச் 2022 (11:36 IST)
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சப்தமி அன்று தாமரை மலர் கொண்டு சூரியனை வழிபட்டால் ஆனந்தமய வாழ்வு, அடுத்த பிறவியில் முக்தி உண்டாகும்.


மாசி மாத சப்தமி விரதம் உள்ளவரை துன்பம் அண்டாது. புரட்டாசி மாதமும் அவ்வாறே. தை மாத விரதம் சக்தி உண்டாகும்; பாபம் தொலையும். மாசி மாத தேய்பிறை சப்தமி விரதம் மனோமாத தேய்பிறை சப்தமி விரதம் மனோபீஷ்டம் நிறைவேறும்.

பங்குனி மாத வளர்பிறை சப்தமி நந்தா சப்தமி விரதபலன் தெய்வ பக்தி வளரும். உத்தமலோக வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

இந்த திதியின் அதிதேவதை சூரிய பகவான் ஆவார். இந்த தினத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பான நன்மைகளை தரும்.

சப்தமி திதி: தொலைதூர பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. புதிய வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ள சிறந்த திதி இது. திருமணம் செய்யலாம். புதிய இன்னிசை சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். புதிய ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்