முன்னதாக குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் 130 ஆவது தொடக்க விழாவில் பேசியபோது, “என்னை தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே என்னை தெரியும். ஆனால், தமிழக பாஜக புதிய தலைவர் ஆனது தபால்காரருக்கே இப்போதுதான் தெரியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், அவர் பேசுகையில், ”கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் செய்யாமல் இப்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பாஜகவை மக்கள் விரோத அரசு என விமர்சிக்கிறார்.
காங்கிரஸ் கட்சியினர், குஷ்பு போன்றவர்களை வைத்து பாஜகவை விமர்சனம் செய்கிறார்கள். குஷ்பு போன்றவர்கள் விமர்சனம் செய்வது குறித்து பாஜக கவலைப்படவில்லை. தமிழகத்தில் பாஜக வரும் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய சக்தியாக விளங்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ”பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து உள்நோக்கத்தோடு மத்திய அரசை விமர்சித்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராமதாஸ் கூறி வருவது பாஜக தொண்டர்களை புண்படுத்துகிறது.