பிரகாஷ்ராஜை விட்டால் தமிழில் நல்ல வில்லன்கள் இல்லை.
வில்லன்கள் என்றால் இப்போதெல்லாம் இந்தியிலிருந்துதான் இறக்குமதி செய்கிறார்கள்.
சூர்யா நடிக்கவுள்ள சிங்கம் 3 இல் பல இந்தி நடிகர்கள் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. தற்போது இந்தி நடிகர் சரத் சக்சேனாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சிங்கம் 3 இல் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.