கனிமொழி உதவியாளர் தம்பி என கூறியவர் கொடுத்த வாக்குமூலம்.. என்ன சொல்லி இருக்கிறார்?

Siva

வியாழன், 3 அக்டோபர் 2024 (11:48 IST)
திமுக எம்எல்ஏ கனிமொழியின் உதவியாளரின் தம்பி என கூறி காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் மன்னிப்பு கேட்டு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

கோவையில் கடந்த ஒன்றாம் தேதி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, மது போதையில் பிடிபட்ட இளைஞர்கள் காவல்துறை அதிகாரிகளிடம், "நான் கனிமொழி எம்பி உதவியாளரின் தம்பி" என்று கூறியுள்ளார்.

இது குறித்து வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது, கனிமொழி உதவியாளர் பெயரை தவறாக பயன்படுத்தியது தெரிய வந்ததால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அந்த இளைஞர்கள் தற்போது மன்னிப்பு கேட்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், "பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு சென்ற போது, காவல்துறையினர் சோதனையில் பிடிபட்டோம். அப்போது, நாங்கள் மது போதையில் இருந்ததால் தவறான சில வார்த்தைகளை பயன்படுத்தினோம்.

அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கனிமொழி எம்பி  உதவியாளர் யார் என்பதை எங்களுக்கு தெரியாது. இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்