கொலையா? நரபலியா? துண்டு துண்டாக கிடக்கும் பெண்ணின் உடல்

வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (16:42 IST)
நாமக்கல் அருகே பெண்ணின் கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
நாமக்கல் அருகில் உள்ள நல்லிக்கவுண்டம் புதூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் அடியில் மனித உடல் ஒன்று துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததையும், அதனருகே 3 ஆடுகள் இறந்து கிடந்ததையும் கண்டனர். அது 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுடையது என்றும், தலை உள்ளிட்ட உடலின் மற்ற பாகங்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் அந்த பெண் கொலை செய்யப்பட்ட காரணம் குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்