ஆனால் திமுக கூட்டணியில் அப்படியில்லை. இன்னும் சுமார் அரைடஜன் கட்சிகளுக்கு தொகுதியை பிரித்து கொடுக்கும் பணி உள்ளது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட், சிபிஐ, மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் இருப்பதாக கூறிக்கொள்ளும் மதிமுகவும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 2 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ளுமா? என்பது சந்தேகமே!
மேலும் இந்த கூட்டணியில் மமக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் அதிமுகவிடம் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தேமுதிக, தமாக ஆகிய கட்சிகளும் திமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே இத்தனை கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்தது போக திமுகவுக்கு 15 தொகுதிகளாவது மிஞ்சுமா? என்ற அச்சம் திமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் என்ன நடக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்