இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் முக்கிய அரசியல் கட்சிகளின் நிலைமை இன்னும் மோசமாகும் என்றே அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் வரும் 31ஆம் தேதி 'ரஜினி பேரவை' என்ற அமைப்பை ரஜினி தொடங்குவார் என்றும் இந்த பேரவை தமிழகம் முழுவதும் விரிவாக்கப்பட்டு தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கப்படும் என்றும் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் இந்த பேரவை அரசியல் கட்சியாக மாறும்' என்றும் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் ரஜினி மனதில் என்ன இருக்கிறது என்பது அவருக்கு மட்டும்தானே தெரியும்!