இந்த நிலையில் இன்று முதல் அதிமுகவின் அதிகாரபூர்வ சேனாலாக 'நியூஸ் ஜெ' என்ற தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த புதிய சேனல் குறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டரில் கூறியாபோது, 'இன்று முதல் மற்றுமொரு செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. அபாரம். ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாத சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எப்படி இது போன்ற ஒரு வியாபார அமைப்பை தொடங்க முடிகிறது? 2019-க்காக காத்திருக்கின்றேன்" என்று மறைமுகமாக நியூஸ் ஜெ தொலைக்காட்சியை தாக்கி விமர்சனம் செய்துள்ளார்.