அந்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு 7 கோடிக்கும் மேல் கடன் இருப்பதாக கூறிப்பிட்டுள்ளார் விஜயகாந்த். தனது மனைவி பிரேமலதாவிற்கு 1 கோடிக்கும் மேல் கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் விஜயகாந்திடம் ரூ.925000, பிரேமலதாவிடம் ரூ.2280825 கையிருப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த் பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.76016721, அசையா சொத்தின் மதிப்பு ரூ.193775500 உள்ளது. அவரது மனைவி பிரேமலதா பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.45681893, அசையா சொத்தின் மதிப்பு ரூ.174276600, மற்றும் தங்கம் 1410 கிராம் உள்ளதாக விஜயகாந்த் தனது வேட்புமனு தாக்கலில் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.