கன்னியாகுமரி மக்களவை தொகுதி: பொன் ராதாகிருஷ்ணன் 1.18 லட்சம் வாக்குகளில் பின்னடைவு

ஞாயிறு, 2 மே 2021 (16:19 IST)
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும் தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் வசந்த் மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தொகுதியில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல பிரபலங்கள் இந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த போதிலும் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பின்னடைவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சற்றுமுன் வெளியான தகவலின்படி கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை பின்னுக்குத்தள்ளி தொடர்ந்து முன்னிலை உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்