வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் எம். கே.அசோக் வாக்கு சேகரிப்பு!

புதன், 24 மார்ச் 2021 (11:41 IST)
வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் எம். கே.அசோக் அடையார் பகுதியில் திறந்த வேனில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். 

 
முன்னதாக அடையார் பத்மநாப கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார். அடையார் பகுதியில் உள்ள பத்மநாப நகர் காந்தி நகர் அடையார் கெனால் ரோடு போன்ற பகுதிகளில் ரெட்டை இலை சின்னத்திற்கு  தீவிர வாக்கு சேகரித்தார்.
 
வாக்கு சேகரிப்பின் போது வேளச்சேரி பகுதி செயலாளர் கணேசன் வட்டச்செயலாளர் இமான் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சி பிற கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்