வாகனங்களுக்கு கட்டுப்பாடு... சென்னையில் வண்ண பாஸ்கள்!

சனி, 11 ஏப்ரல் 2020 (15:29 IST)
விரைவில் சென்னையிலும் வாகனங்களுக்கு வண்ண பாஸ்கள் வழங்கப்பட உள்ளன என தகவல் வெளியாகியுள்ளனர். 
 
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது. 
 
இந்நிலையில், விரைவில் சென்னையிலும் வாகனங்களுக்கு வண்ண பாஸ்கள் வழங்கப்பட உள்ளன என மாவட்ட ஆணையர் பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் விரிவாக தெரிவித்துள்ளதாவது, 
 
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்களில் இரவில் கலவை சாதங்கள் வழங்கப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் தினமும் வெளியே வருவதைத் தடுக்கும் வகையில், விரைவில் சென்னையிலும் வாகனங்களுக்கு வண்ண பாஸ்கள் வழங்கப்பட உள்ளன. 
 
அவசர மருத்துவ சேவை, திடீர் உயிரிழப்பு, திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படும். அத்தியாவசிய வேலைகளை செய்வோருக்கும் பாஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்