மழையின் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வழக்கமாக 7000 டன் அத்தியாவசிய காய்கறி வருகை உள்ள நிலையில் இன்று 4000 டன் மட்டுமே வந்தது. இதனால் தக்காளி 1 கிலோ 60, முருங்கைக்காய் 1 கிலோ 100-க்கும், கேரட் 1 கிலோ 100-க்கும், எலுமிச்சை 1கிலோ 100-க்கும் விலை அதிரடியாக உயர்ந்தது.
இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. முல்லை கிலோ ரூ.1200, ரோஜா ரூ.200, ஆரஞ்சு செவ்வந்தி ரூ.200, மஞ்சள் செவ்வந்தி ரூ.160, துளசி ரூ.60, மரிக்கொழுந்து ரூ.50, அரளிப்பூ ரூ.250 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது.