அமைச்சர் ஆவதற்கான எல்லா தகுதிகளும் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளன: கே.எஸ்.அழகிரி

திங்கள், 28 நவம்பர் 2022 (11:38 IST)
அமைச்சர் ஆவதற்கான எல்லா தகுதிகளும் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளன என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 
 தமிழகத்தில் விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் தாராளமாக அமைச்சராக பதவி ஏற்கலாம் என்றும்,  அவருக்கு அமைச்சர் ஆவதற்கு எல்லா தகுதியும் உள்ளன என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார் 
 
கட்சி தொண்டர்களால் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார் என்றும் அமைச்சராவதற்கு இந்த ஒரு தகுதியை போதும் என்றும் அவர் அமைச்சராக வேண்டும் என்று அவரது கட்சியினர் விரும்புகின்றனர் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர் விருப்பம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
உதயநிதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்றும் அவர் அமைச்சராக அதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்