தமிழகத்தில் ஏற்கனவே சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில், சென்னை - கோவை வந்தே பாரத் ரயில், சென்னை - விஜயவாடா வந்தே பாரத் ரயில், சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் ஆகியவை இயங்கி வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளன.
அது மதுரை - பெங்களூரு இடையே ஒரு வந்தே பாரத் ரயில், சென்னை - நாகர்கோவில் இடையே ஒரு வந்தே பாரத் ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளன. இம்மாத இறுதியில் இந்த இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.