தமிழ்நாடு முழுவதும் ஏரி, குளம், கம்மாய் ஆகிய நீர்நிலைகளை தூர்வாரி பராமரிப்பதற்காக 2017 ஆம் ஆண்டு ரூ.100 கோடியும், 2018 ஆம் ஆண்டு ரூ.331 கோடியும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு தமிழகத்தில் நீர்நிலைகள் எல்லாம் தூர்வாரப்படவில்லை எனவும், ஒவ்வொறு வாய்க்கால்களிலும், ஆறுகளிலும் ஆளுயரத்திற்கு புதர் மங்கி கிடக்கிறது எனவும் டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து டி.டி.வி தினகரன், தமிழகம் முழுவதும் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கிறார்கள் என்றும், அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்காத மாநில அரசு, மக்களை திசை திருப்பவே இது போன்ற வெற்று அறிவிப்புகளை வெளியிடுகின்றனர் என்றும் கூறியிருக்கிறார்.