முக்கிய வழக்கில் இருந்து திடீரென் விலகி கொண்ட டிடிவி தினகரன்!

திங்கள், 15 மார்ச் 2021 (13:22 IST)
அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கு ஒன்றில் இருந்து திடீரென டிடிவி தினகரன் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டிடிவி தினகரன் உள்பட ஒருசிலர் தாக்கல் செய்திருந்தனர். 
 
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் இருந்து டிடிவி தினகரன் தற்போது விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் தற்போது அமமுக என்ற கட்சியைத் தொடங்கி விட்டதால் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்