அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் எவை எவை?

ஞாயிறு, 14 மார்ச் 2021 (20:03 IST)
அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்  எவை எவை என தற்போது பார்ப்போம்
 
கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். அனைவருக்கும் வீடு வழங்கும் அம்மா இல்லம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
 
மெட்ராஸ்  உயர்நீதிமன்றம் தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் செய்யப்படும்.
 
அரசு பணிகளில் இடம் பெறாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி உறுதியாக வழங்கப்படும்.
 
பெண்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்குடன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அம்மா வாஷிங்மிஷின் வழங்கப்படும்
 
மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
 
கோவை மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும்.
 
கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2G  டேட்டா இலவசமாக வழங்கப்படும்
 
வீட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும்
 
காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய கல்லூரி தொடங்கப்படும்
 
மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி ரூ. 2,500 ஆக உயர்வு
 
அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ 10 ஆயிரம் வரை வட்டியில்லாக் கடன்.
 
வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்படும்.
 
மாவட்டந்தோறும் மினி ஐ.டி. பார்க் நிறுவப்படும்.
 
ரேசன் பொருட்கள் வீட்டிற்கே கொண்டு வந்து வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
 
அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும்.
 
அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு காலம் 1 வருடமாக உயர்த்தப்படும்
 
அனைத்து வீடுகளுக்கும் அரசு இலவச கேபிள் சேவை .
 
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை
 
மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்.
 
கிராம பூசாரிகளுக்கான ஊக்க ஊதியம் உயர்த்தப்படும்.
 
மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு பழைய சலுகையே தொடரும்.
 
நெசவாளர்களுக்கு ரூ 1 லட்சம் வரை கடன் தள்ளுபடி.
 
பழுதடைந்த அனைத்து மத ஆலயங்களும் புனரமைக்கப்படும்.
 
நாகை துறைமுகத்தில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்
 
நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு 50% கட்டணச் சலுகை.
 
குல விளக்கு திட்டத்தின் கீழ் ரூ 1,500 கணக்கில் செலுத்தப்படும்
 
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டப்படும்
 
நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்
 
பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை
 
மாதம்தோறும் மின் கணக்கீட்டு முறை பின்பற்றப்படும்
 
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.25 ஆயிரம் மானியம்
 
 
இவ்வாறு அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்